April 1, 2023 1:07 am
adcode

மாணவர்களின் கல்வியை முன்னெடுப்பதற்காக வானொலி மற்றும் தொலைக்காட்சி சேவைகள் ஆரம்பம்.

மாணவர்களின் கல்வியை முன்னெடுப்பதற்காக முழு நேர கல்வி வானொலி சேவை  இன்று திங்கள் (16) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

ஊடகங்கள் வாயிலாக மாணவர்களின்; கல்வித் தேவையை நிறைவேற்றுவதனை அடிப்படையாகக் கொண்ட அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் வெகுஜன ஊடகத்துறை அமைச்சும் கல்வி அமைச்சும் இணைந்து இதனை நடைமுறைப்படுத்தியுள்ளன.

‘விஷன் எவ்.எம்’ எனும் பெயரில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் 102.1 மற்றும் 102.3 எவ்.எம். அலைவரிசைகளின் ஊடாக இந்த நிகழ்ச்சிகளை செவிமடுக்கலாம்.

எதிர்வரும் திங்கட்கிழமையில் இருந்து இந்த ஒலிபரப்பு ஆரம்பிக்கப்படும். நாளாந்தம் அதிகாலை 4.00 மணியிலிருந்து நள்ளிரவு வரை 20 மணி நேரம் இந்தச் சேவை இடம்பெறும்.

இதேவேளை ‘பியோ ரிவி’ அலைவரிசையின் ஊடாக 6 கல்விச் சேவைகள் எதிர்வரும் வாரங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளன.

Share

Related News