March 26, 2023 4:44 am
adcode

வாசித்து நினைவில் வைத்துக் கொள்வது எப்படி?

🗣️📕🧠
வாசித்து நினைவில் வைத்துக் கொள்வது எப்படி❓
➖➖➖➖➖➖

திறம்பட விடயமொன்றை வாசித்து நினைவில் வைத்துக் கொள்வது எப்படி என்று தயவுசெய்து சொல்ல முடியுமா?
(ஒரு மாணவி கேட்ட கேள்விக்கான பதில் சுருக்கமாக…,)

➖➖➖➖➖➖

எந்தவொரு விடயத்தை வாசிக்கும்போது வாசிப்பதற்கான நோக்கம் இருப்பது மிக முக்கியமாகும்.
இது வாசிப்பதை நினைவில் கொள்வதற்கான முதற்காரணமாகும்.
📖
நான் ஏன் இதை வாசிக்கிறேன்?
வாசிப்பதன் மூலம் எதை கற்கப்போகிறேன்?
என்பதை புரிந்தால் மட்டுமே வாசிப்பின் பயனை அடையலாம்


📖 வாசிக்கும் விடயத்தில் ஆசை, ஆர்வமாக இருத்தல்


📖 கவனத்தை வாசிப்பில் நிலைநிறுத்திக்கொள்ளல்


📖 வாசிக்கும் விடயத்துடன் சார்ந்த காட்சிகளை கற்பனையில் கொண்டுவருதல்


📖 மிக முக்கியமான வசனங்களை, பந்திகளை சத்தமாக வாசித்தல்


📖 வாசிக்கும் விடயத்தை ஏற்கனவே தெரிந்துவைத்துள்ள விடயங்களுடன் தொடர்புபடுத்திப் பார்த்தல்


📖 வாசித்தவற்றை மீண்டும் வாசித்துப் பார்த்தல்


📖 முடியுமானால் வாசித்ததை இன்னுமொருவருடன் பகிர்ந்துகொள்ளல் …

என்பன மிக முக்கிய விடயங்களாகும்.

🗣️📕
இந்த முறையில் வாசிக்கும்போது மூளையி்ன் 🧠 செயற்பாடுகள் மற்றும் உணர்ச்சிகள் தூண்டப்படுவதுடன் நினைவாற்றலும் கூர்மையாக்கப்படும்.
🗣️📖
நாம் வாசிக்கும்போது எமது மூளை எம் கண்முன்னுள்ள சொற்களை புரிந்துகொள்தைப்போன்று சவாலான கருத்துக்களை சரியாக சீர்திருத்திக்கொள்ளவும் புதியவற்றை சிந்தனையில் உருவாக்கிக்கொள்ளவும் தூண்டுதலை ஏற்படுத்தும்.
🧠📖
நாம் ஒரு விடயத்தை வாசிக்கும்போது அந்தவிடயம் என்ன சொல்ல வருகிறது என்பதை புரியாவிட்டால் நாம் வாசிக்கவில்லை என்றே பொருளாகிவிடும்.

வாசிக்கும் விடயத்தினுள் என்ன இருக்கிறது என்பதை புரிந்துகொள்வதற்காகவே நாம் வாசிக்க வேண்டும் என்பதை நினைவிற்கொள்வோம்.

📖🧠📖🧠
—————
அஸ்ஹர் அன்ஸார்
மனோதத்துவ ஆலோசனை நிபுணர்
மனோதத்துவ எழுத்தாளர்

Share

Related News