ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பான தீர்மானம் அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (24) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மகாநாட்டில் அமைச்சரவை பேச்சாளர் இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில் அமைச்சரவையின் ஆறு உப குழுக்களும், அமைச்சரவையும் இது குறித்து சுமார் ஒரு மணித்தியாலம் கலந்துரையாடியதாக குறிப்பிட்டார்.