உலகின் அதிக ஆடம்பரம் வாய்ந்த கப்பலான ‘Mein Schiff 5’ கப்பல் இன்று அதிகாலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
2000 க்கு மேற்பட்ட பயணிகள் மற்றும் 900 க்கு மேற்பட்ட பணியாளர்களுடன் ‘Mein Schiff 5’ கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளதாக ஹார்பர் மாஸ்டர் நிர்மால் சில்வா தெரிவித்தார்.
இந்த கப்பல் இன்றிரவு கொழும்பு துறைமுகத்திலிருந்து புறப்பட்டு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நோக்கி பயணிக்கவுள்ளது. குறித்த கப்பல் நாளை இரவு 09 மணிக்கு நாட்டிலிருந்து புறப்படவுள்ளதாக ஹார்பர் மாஸ்டர் நிர்மால் சில்வா குறிப்பிட்டார்.