விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதி தேதியில் அல்லது அதற்கு முன்னதாக 2020/2021 கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக சேர்க்கைக்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்க முடியாத விண்ணப்பதாரர்களுக்கு அறிவிப்பு.
நாட்டில் நிலவும் கோவிட் -19 தொற்று நிலைமை காரணமாக, 2020 ஆம் கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக சேர்க்கைக்கு 2021 ஜூன் 18 அன்று அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதி தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாத விண்ணப்பதாரர்களுக்கு தற்போதுள்ள பயணக் கட்டுப்பாடுகள் / ஊரடங்கு உத்தரவை நீக்கிய பின்னர் சலுகை காலம் வழங்க பல்கலைக்கழக மானிய ஆணையம் முடிவு செய்துள்ளது.
தலைவர்
பல்கலைக்கழக மானிய ஆணையம்
18.06.2021