March 26, 2023 5:21 am
adcode

தொலைகாட்சி அலைவரிசை ஊடான மாணவர்களின் கற்றல் நடவடிக்கை பாடசாலைகளைப்போன்று காலை 7.30 மணி தொடக்கம் பிற்பகல் 1.30மணிவரை முன்னெடுக்கப்படும் – செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா

சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளுக்கு அமைய, மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுப்பது தொடர்பில் பல்வேறு மூலோபாயங்கள் பரீட்சிக்கப்பட்டுவருவதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

 

தற்போதைய சூழ்நிலையை கருத்திற் கொண்டு 20 தொலைகாட்சி அலைவரிசைகளின் ஊடாக மாணவர்களுக்கு வீடுகளிலிருந்தே கல்வி கற்பதற்கான வசதிகளையும் வழங்குவதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சுனாமி கடல்பேரலை மற்றும் தற்போதைய கொரோனா தொற்று பரவல் அச்சுறுத்தலுக்கு ஈடுகொடுக்கக்கூடியவகையில் இந்த தொலைகாட்சி அலைவரிசை ஊடான மாணவர்களின் கற்றல் நடவடிக்கை பாடசாலைகளைப்போன்று காலை 7.30 மணி தொடக்கம் பிற்பகல் 1.30மணிவரை முன்னெடுக்கப்படும் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா என்றும் சுட்டிக்காட்டினார்.

 

தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைக்கு முன்னுரிமை அளித்து, பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டு எதிர்கால நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா மேலும் தெரிவித்தார்..

Share

Related News