March 23, 2023 4:23 pm
adcode

2020 G.C.E O/L பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிட முடியாத நிலை. காரணம்?

2020 கல்விப் பொதுத் தராதரப்பத்திர சாதாரண பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

 

கொழும்பில் நேற்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் இதுதொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், 2020 சாதாரண தரப்பரீட்சையில் 6 இலட்சத்து 22 ஆயிரம் பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தார்கள்.

 

இதில் 1 இலட்சத்து 69 ஆயிரம் பரீட்சார்த்திகள் நுண்கலை சார்ந்த பாடங்களைத் தெரிவு செய்திருந்தார்கள்.

 

தற்சமயம் நிலவும் Covid-19 பரவலினால் நுண்கலை சார்ந்த பாடங்களை தெரிவு செய்த பரீட்சார்த்திகளுக்கான செய்முறைப் பரீட்சைகள் நடத்தப்படவில்லை என்றும் அமைச்சர் கூறினார்.

 

செய்முறைப் பரீட்சையை நடத்தி பரீட்சார்த்திகளின் பெறுபேறுகளை விரைவில் வெளியிட அரசாங்கம் எதிர்பார்த்திருந்தாலும் இதற்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

 

இது மாணவர்களுக்கு இழைக்கப்படும் பாரிய அநீதியாகும் என்றும் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கூறினார்.

Share

Related News