பொரளை பிரதேசத்தில் பிரமுகர்கள் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு பகலில் விளக்குகளை ஏற்றி ஓட்டிச் சென்ற டிஃபென்டர் கார்கள் உட்பட ஆறு சொகுசு வாகனங்களுடன் ஆறு இளைஞர்களை பொரளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மாநகர போக்குவரத்து பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் பொரளை பொலிஸ் போக்குவரத்து பிரிவின் அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் குறித்த குழுவினரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் விஐபி யினர் அல்ல என்றும், பொரளை குருந்துவத்தையை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் கோடீஸ்வர வர்த்தகர்களின் மகன்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள அனைத்து விஐபி ஸ்டிக்கர்கள் மற்றும் லைட் சிக்னல்களை அகற்றி, வாகனங்களின் சேஸ் மற்றும் இன்ஜின் எண்களை சரிபார்த்து அந்த நபர்களிடம் கொடுத்ததாக விசேட போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட இளைஞர்களும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.