எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் விசேட கடமைகள் மற்றும் பாதுகாப்பிற்காக 60,000 காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இதற்காக 54,000 காவல்துறை உத்தியோகத்தர்களை ஈடுபடுத்துவதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 6,0000 ஆக அதிகரித்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தேர்தல் கடமைகளுக்காக விசேட அதிரடிப்படை சிப்பாய்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்தும் நோக்கில் காவல்துறை அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.